உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டுத்திருப்பலியில் திரண்ட பக்தர்கள்: பெசன்ட் நகரில் கோலாகலம்

கூட்டுத்திருப்பலியில் திரண்ட பக்தர்கள்: பெசன்ட் நகரில் கோலாகலம்

பெசன்ட் நகர்: பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில், 43வது ஆண்டு திருவிழாவில், நேற்று நடந்த ஜெபமாலை, கூட்டுத்திருப் பலியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவின் இரண்டாவது நாளான ÷ நற்று, உழைப்பாளர் விழாவாக சிறப்பிக்கப்பட்டது. காலை, 7:45 மணிக்கு, அருட்பணி  போஸ்கோ தலைமையில், ஆங்கில மொழியில் திருப்பலி  நடைபெற்றது.

53 முறை உச்சரித்து...: காலை, 9:௦௦ மணிக்கு, அருட்பணி பெர்னார்டு லாரன்ஸ் மற்றும் நண்பகல், 12:௦௦ மணிக்கு, அருட்பணி ஐசக்பால் ஆகியோர்   தலைமையில் தமிழில் திருப்பலி நடைபெற்றன. மாலை, 5:30 மணிக்கு, ஜெபமாலை நடைபெற்றது. ‘அருள் நிறைந்த மரியே வாழ்க…’ என்ற  ஜெபத்தை, 53 முறை உச்சரித்து உருக்கமாக ஜெபித்தனர். பின், நவநாள் ஜெப நிகழ்ச்சி நடந்தன. அதை தொடர்ந்து, திருச்சி, மறைமாவட்ட ஆயர், அந்தோணி டிவோட்டா தலைமையில், ‘அர்ப்பணத்தால் உயரும் உழைப்பு’ என்ற தலைப்பில்,  கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

மாதா தேர்பவனி: திருப்பலி கூட்டத்தில், ஆயர் அந்தோணி டிவோட்டா பேசியதாவது: மனித உழைப்பில் தான், ஒரு நாடு முன்னேற்ற பாதையில்  செல்கிறது. அர்ப்பணிப்பும், இறைநம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் உயர முடியும். அன்பு, இரக்கம் ஒரு மனிதனுக்கு அடிப்படை குணமாக இரு க்க வேண்டும்.  கிறிஸ்தவ வாழ்வில், அதற்கான வழிகாட்டுதல்கள் பெருகி கிடக்கிறது. மகிழ்வு, அமைதி, திருப்தி போன்றவை மனித வாழ்க்கைக்கு  நிறைவு தருபவை. இவ்வாறு, அவர் உரை நிகழ்த்தினார். திருப்பலி முடிந்ததும், ஊழியத்தில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.  அதை தொடர்ந்து, கடற்கரை சாலையில், மாதா தேர்பவனி நடைபெற்றது. மறைமாவட்ட கத்தோலிக்க தொழிலாளர் இயக்கத்தினர், நேற்றைய திரு விழாவை முன்னின்று நடத்தினர். வேண்டுதல் நிறைவேறியதற்காக, கோவில் வளாகத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். திரளான  பக்தர்கள் நேற்றும், கொடி கம்பத்தில், பூட்டு, தாலி, தொட்டில் கட்டினர். கூட்டுத்திருப்பலி, தேர்பவனி நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.  இன்று காலை, 5:30, 6:30 மற்றும் 11:00 மணிக்கு, தமிழில் திருப்பலி நடைபெறும். காலை, :30 மணிக்கு, ஆங்கிலத்தில் திருப்பலி  நடைபெறும். மாலை, 5:30 மணிக்கு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், அதை தொடர்ந்து தமிழில், கூட்டுத்திருப்பலி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !