கள்ளக்குறிச்சி சத்ய சாயி சமிதியில் பவுர்ணமி பூஜை
ADDED :3740 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சத்ய சாயி சேவா சமிதியில் பவுர்ணமி பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி சுபேதார் தெரு சத்ய சாயி சேவா சமிதியில், ஆவணி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கணபதி, மகாலஷ்மி, நவக்கிரக ஹோமங்கள் நடத்தினர். தொடர்ந்து சத்யநாராயண பூஜை செய்து பிரசாதம் வழங்கினர். வழிபாட்டினை குருமூர்த்தி குருக்கள் செய்து வைத்தார். நிகழ்ச்சியை சமிதி பொறுப்பாளர்கள் கிஷோர், கண்ணன், ரத்னவேல், கணேசன், சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் செய்தனர். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.