உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலிகை ஓவியங்களால் ஆன சித்திரம் சாவடி பராமரிப்பின்றி அழிந்து வருகிறது

மூலிகை ஓவியங்களால் ஆன சித்திரம் சாவடி பராமரிப்பின்றி அழிந்து வருகிறது

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் நரசிங்கம்பட்டி சித்திரம் சாவடியில், மூலிகையால் வரையப்பட்ட வரலாற்று ஓவியங்கள், சிதிலமடைந்து வருகிறது.இக்கிராம மையப்பகுதியில் உள்ள இச்சாவடியில் மூலிகையால் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளதால் சித்திரம் சாவடி என்றழைக்கப்படுகிறது. இதன் மேற்கூரைகள் இடிந்து விழுந்து சிதிலமடைவதோடு, பராமரிப்பின்றி ஓவியங்கள் பாழாகி வருகிறது. சித்திரம் சாவடியை நேரில் ஆய்வு செய்து ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ்: சித்திரம் சாவடியில் முட்டை பூச்சால் உருவாக்கப்பட்ட சுவற்றில், நவாப் காலத்தில் ராமாயணம், மகாபாரதத்தை பற்றி எடுத்துரைக்கும் வகையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும், தேக்கு மரத்தால் ஆன கட்டைகள் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. 70 ஆண்டுகளுக்கு முன் விளக்கு ஏற்றி கோயில் போல் பராமரிக்கப்பட்டு வந்த இடம் இன்று, புதர் மண்டி பாழாகி வருகிறது. கோயிலுக்கு இணையாக சித்திரம் சாவடியை மதிப்பதால் இன்றும் பொதுமக்கள் செருப்பு அணிந்து செல்வது கிடையாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !