ராகவேந்திர ஸ்வாமிகள் ஆராதனை துவக்கம்
ஈரோடு: ராகவேந்திர ஸ்வாமிகளின், 344வது ஆராதனை மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. ஈரோடு, டவுன் அக்ரஹார வீதியில் உள்ள பாதராஜ மடத்தில் ராகவேந்திர ஸ்வாமிகளின், 344வது ஆராதனை மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. இன்று (31ம் தேதி) மற்றும் நாளையும் நடக்கிறது. தினமும் காலை நிர்மால்ய விசர்ஜனம், சேவா சங்கல்பம், பாத பூஜை, பல்லக்கு உற்சவம், ரதோற்ஸவம், கனகாபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம், மாலையில் பஜனா மண்டலியரின் தேவரநாம பஜனை, கர்நாடக சங்கீதம், தீபாராதனை, ஸ்வஸ்தி பல மந்த்ராஷதை நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஹைஸ்ரநாம மந்தர ஹோமம் நடக்கிறது. ஹோமத்தால் வேலை, திருமண ப்ராப்தி, தம்பதியினர் பிணக்கு தீர்வு, நிரந்தர வருவாய், வீடு முதலிய வசதிகள், ஆரோக்கியம், தீர்க்காயள் முதலியவை கிடைக்கும். வரும், 1ம் தேதி காலை, 10 மணிக்கு ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. இன்றும், நாளையும் மாலை, 6 மணிக்கு மாணவ, மாணவியரின் "கீ போர்டு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதராஜ மடத்தினர் செய்து வருகின்றனர்.