காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :3740 days ago
காஞ்சிபுரம்: மழை வேண்டி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற பக்தர்கள், கஞ்சி கலயம் மற்றும் பால்குட ஊர்வலம் சென்றனர்.சின்ன காஞ்சிபுரம், திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இருந்து, வழிபாட்டு மன்ற பக்தர்கள், கஞ்சி கலயம் மற்றும் பால்குடம் எடுத்து, பெரிய காஞ்சிபுரம், தாமல்வார் தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.ஊர்வலத்தில், பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தியபடியும், பின் கஞ்சி கலயம் சுமந்தும் சென்றனர். காந்தி சாலை, காமராஜர் சாலை, மேற்கு ராஜ வீதி வழியாக, தாமல் வார் தெரு கோவிலை 11:00 மணியளவில் சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் அடிகளாரின் பவள விழா மற்றும் மழை வேண்டி, கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.