உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை நகரில் ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம்

உடுமலை நகரில் ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம்

உடுமலை:உடுமலை நகரில் நேற்று நடந்த, ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை-பழநி ரோட்டில் உள்ள, மதுரை வீரன் முனியப்பன் கோவில் வளாகத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மகளிர் வழிபாட்டு மன்றம் செயல்படுகிறது.வழிபாட்டு மன்றம் சார்பில், பக்தர்கள் பங்கேற்ற ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம் நேற்று நகரில் நடந்தது.உடுமலை மாரியம்மன் கோவில் முன், பொள்ளாச்சி ரோட்டில் துவங்கிய ஊர்வலம், தளி ரோடு, கச்சேரி வீதி வழியாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தது. சிறப்பு அபிேஷகம், பூஜையை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம், மதுரை வீரன் முனியப்பன் கோவிலில் நிறைவடைந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக மகளிர் வழிபாட்டு மன்ற பொறுப்பாளர் ஜோதி முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார்; நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கஞ்சிக்கலயம் எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !