உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடகர சதுர்த்தியொட்டி புனித பாதயாத்திரை

சங்கடகர சதுர்த்தியொட்டி புனித பாதயாத்திரை

புதுச்சேரி: சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பத்திற்கு புனித பாத யாத்திரை நடந்தது. செப்., 1ம் தேதி மகா சங்கடகர சதுர்த்தியொட்டி அரியாங் குப்பம் சுப்ராயபிள்ளை வீதியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையொட்டி நேற்று காலை புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து, விநாயகர் சிலை அலங்கரித்து ரதத்தில் ஏழுந்தருள செய்து, பக்தர்கள் புனித பாதயாத்திரையாக, அரியாங்குப்பம் கோவிலுக்கு வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி தலைமயைில் நடந்த புனித பாதையாத்திரையில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !