உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் 344ம் ஆண்டு ஆராதனை!

ராகவேந்திரர் கோவிலில் 344ம் ஆண்டு ஆராதனை!

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமி கோவிலில் ஆராதனையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலுார் கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில் 344ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், சிறப்பு அபிஷேகம், பூஜை, மதியம் அலங்காரம், ஹஸ்தோதகம் நடந்தது. ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (1ம் தேதி) விடியற்காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, பகல் 12:00 மணிக்கு அலங்காரம், ஹஸ்தோதகம், இரவு 8:30 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !