சந்தவெளியம்மன் கோவில் அலங்கார பூஜை விழா
ADDED :3739 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் உள்ள, சந்தவெளியம்மன் கோவிலில் நடந்த, அலங்கார பூஜை விழாவில், பத்ரகாளிஅம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரிய காஞ்சிபுரம், சன்னிதி தெருவில் சந்தவெளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அலங்கார பூஜை விழா நடைபெற்று வரும். இந்த ஆண்டு, நேற்று முன்தினம் இரவு சந்தவெளியம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில், அனைத்து வகை பழங்கள், 21 வகை அன்னங்கள் படைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், நண்பகல் 12:00 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணியளவில், மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.