பசுவந்தனையில் 108 திருவிளக்கு பூஜை
                              ADDED :5217 days ago 
                            
                          
                          
பசுவந்தனை : பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் பொதுமக்கள் நலன் வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மன் சமேத சுயம்புலிங்கம் கைலாசநாதர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்மன், சோமாஸ்கந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. நிகழ்ச்சிக்கு கடம்பூர் இந்திரா தலைமை வகித்து முதல் தீபத்தை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். பின்னர் மந்திரங்கள் பூஜிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. விழாவில் கைலாசநாதர் பஜனை குழு தலைவர் குருநாதன், செயலாளர் காளிமுத்து, பொருளாளர் அழகுமுத்து, உறுப்பினர்கள் சரவணன், ராஜேந்திரன், சாமிநாதன், மனோஜ், அருண்குமார், தங்கப்பாண்டி, குட்டி, கார்த்திக் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கைலாசநாதர் பஜனை குழுவினர் செய்திருந்தனர்.