உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தலக்கரை கோயிலில் பூஜை விழா

சிந்தலக்கரை கோயிலில் பூஜை விழா

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே சிந்தலக்கரை காளிபராசக்தி கோயிலில் சக்திமாலை இருமுடி வேள்வி பூஜை விழா நடந்தது.சிந்தலக்கரை காளிபராசக்தி ராமமூர்த்தி சுவாமிகளின் 27வது ஆண்டு சக்திமாலை இருமுடி வேள்வி பூஜை விழா நடந்தது. இதையொட்டி நாட்டு நலன் கருதி அம்மனுக்கு வேள்வி பூஜையும் 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மகாசித்தர் வழிபாடு, உலகநலன் வேண்டி மும்மத பிரார்த்தனை நடந்தது. மேலும் மாலையில் வெங்கலத்தீச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து அதிகாலை ராமமூர்த்தி சுவாமிகள் பூக்குழி இறங்கி காட்சி அளித்ததுடன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார். சிறப்பு பூஜையில் கீழஈரால் பங்குத்தந்தை ஜான், சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் பள்ளி செயலாளர் திருக்குமரன், நிர்வாகி பவானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !