பத்திரகாளியம்மனுக்கு பவுர்ணமி விளக்கு பூஜை!
ADDED :3738 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே காணிக்கூரில் பத்திரகாளியம்மனுக்கு பௌர்ணமி தின விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், நெய், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தங்க கவசத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11 மணியளவில் விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். அன்னதானம் நடந்தது. பிள்ளையார்குளம் பனையூர் அம்மன் கோயிலிலும் பௌர்ணமி தின விளக்கு பூஜை நடந்தது.