ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் வித்யார்த்தி ஹோமம்!
ADDED :3736 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் வித்யார்த்தி ஹோமம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமை வகித்தார். வித்யாலயத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், கல்வி கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை செய்தனர். கல்வி கடவுள் சரஸ்வதி முன், வளர்க்கப்பட்ட ஹோமத்தை வழிபட்டனர். நிகழ்ச்சியில், வித்யாலய சுவாமிஜிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.