உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகு வள்ளியம்மன் கோயில் விழா: சாக்கு கட்டி ஆடும் பக்தர்கள்!

அழகு வள்ளியம்மன் கோயில் விழா: சாக்கு கட்டி ஆடும் பக்தர்கள்!

பெருநாழி: கமுதி அருகே அம்மனுக்கு காலையில் பால்குடம், அக்னி சட்டி எ டுத்தும், மாலையில் சாக்கு கட்டி ஆட்டம் ஆடியும், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கமுதி அருகே செங்கப்படையில் அழகுவள்ளி அம்மன் கோயிலுக்கு 23ம் தேதி கொடியேற்றி, காப்புக்கட்டினர். அதனையடுத்து, கும்மி அடித்து பாரி வளர்த்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காலை அக்னி சட்டி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு செலுத்தினர். மாலை நான்கு மணியளவில் அம்மனிடம் வேண்டி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சாக்கு கட்டி ஆட்டம் ஆடி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !