வல்லப கணபதி கோவிலில் ஹோமம்
ADDED :4060 days ago
திருவள்ளூர்: ஜெயா நகரில் உள்ள மகா வல்லப கணபதி கோவிலில், 4ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஹோமம் மற்றும் ஆராதனை நடந்தன. திருவள்ளூர், ஜெயா நகரில், மகா வல்லப கணபதி கோவில் ஸ்தாபித்து, நான்கு ஆண்டுகளாகிறது. 4ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஜெயா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.