புதுச்சேரி மாதா பெருவிழா கொடியேற்றம்
ADDED :3734 days ago
புதுச்சேரி:ரெட்டியார்பாளையம் வேளாங்கண்ணி் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் அன்னை வேளாங்கண்ணி மாதா பெரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ரெட்டியார்பாளையம் புனித ஆந்திரேயா ஆலய உதவி பங்கு தந்தை சாமுவேல் அடிகளார் பள்ளியில் உள்ள ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா உருவம் பதித்த கொடியேற்றி, சிறப்பு ஜெபவழிபாடு நடத்தி, மாணவர்கள், பணியாளர்களுக்கு ஆசி வழங்கினார். பள்ளி நிர்வாகி ஜெயராஜ், இயக்குனர் ஜோதிநாதன், முதல்வர் ரெமிஜான், துணை முதல்வர் அங்கப்பன், ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், தலைமை ஆசிரியை உண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, மேலாண்மை அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தனி குழுக்களாக 11 நாட்களுக்கும் நவநாள் ஜெப வழிபாடு நடத்துகின்றனர்.