கற்பக கணபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3732 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட்ரோடு கற்பக கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ரவுண்ட்ரோடு கருணாநிதி காலனியில் கற்பக கணபதி கோயில் உள்ளது. இங்கு பாலாம்பிகா சமேத வைத்தியநாத சுவாமி, வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளன. நேற்றுமுன்தினம் (செப்., 2) காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், கும்ப அலங்கார பூஜை, காலை 7:30 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை, மாலை 7:15 மணிக்கு 2 ம் கால வேள்வி, இரவு 8:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தன. நேற்று காலை 9:45 மணிக்கு தீபாராதனை, காலை 11:15 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தன. காலை 11:30 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பகல் 12 மணிக்கு அலங்காரம், கோ பூஜை, பிரசாதம் வழங்கல் போன்றவை நடந்தன. ஏற்பாடுகளை நடராஜ அய்யர் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.