வீரசக்தி ஆஞ்சனேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
ADDED :3727 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் உள்ள வீரசக்தி ஆஞ்சனேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற்றது. வீரமுடையாநத்தம் கிராமத்தில் உள்ள வீரசக்தி ஆஞ்சனேயர் கோவில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரம், தசா அவதாரத்தில் கிருஷ்ணனின் பிறப்பு வளர்ப்பு பற்றி சொற்பொழிவுடன், கிருஷ்ணனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.