உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா

சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம், புன்செய்தோட்டக்குறிச்சி சேங்கல்மலையில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பைரவருக்கு, சந்தனம், மஞ்சள், இளநீர், பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், பைரவருக்கு வெள்ளிகவசம் அணிவித்து பல்வேறு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் தங்க வளையல்கள் உள்ளிட்ட ஆபரணங்களை வைத்து பூஜை, மஹா தீபாரதனை நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேரந்த ஏரளமன பக்தர்கள் கலந்து கொண்டு, பைரவரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !