செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3726 days ago
அன்னுார்: ஒன்னக்கரசம்பாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, ஒன்னக்கரசம் பாளையத்தில், பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா செப்., 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு யாகசாலை பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலையில், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கலசங்கள் கோவிலை வலம் வருதலும் நடந்தன. காலை 7:30 மணிக்கு விமானம் மற்றும் செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் உட்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் மகா தீபாராதனையும், அன்னதானம் வழங்குதலும் நடந்தது.