முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சி: பெரும்பூண்டி முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடக்கிறது. செஞ்சி தாலுகா, பெரும்பூண்டி, முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, கலச பூஜை, நாடி சந்தனம், ரக்ஷாபந்தனம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், யந்திர பிரதிஷ்டையும், தொடர்ந்து கோபூஜை, மூல மந்திர ஹோமம், தத்துவார்ச்சனை, தம்பதி பூஜையும், 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும், மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. 9:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும் நடக்கிறது. 12:00 மணிக்கு முத்து மாரியம்மன், சிறை மீட்டம்மன், கெங்கையம்மன் பூங்கரகங்கள் ஊர்வலம் நடக்கிறது. 2:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது.