உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிள்ளை சஞ்சீவிராயர் கோவிலில் உறியடி விழா!

கிள்ளை சஞ்சீவிராயர் கோவிலில் உறியடி விழா!

கிள்ளை: கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிள்ளை சஞ்சீவிராயர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் பாலக்கிருஷ்ண பெருமானின் 49ம் ஆண்டு உறியடி விழா கோலாகலமாக நடந்தது. சிதம்பரம் அருகே கிள்ளை சஞ்சீவிராயர்கோவிலில் அருள்பாலிக்கும் பாலக்கிருஷ்ண பெருமான் கோவிலில் ஆண்டு தோறும் கோகுலாஷ்டமியை முன் னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் உறியடி விழா வெகு விமர்சியாக நடந்து வருகிறது. தற்போது 49 ம் ஆண்டு உறியடி விழாவை முன்னிட்டு பாலக்கிருஷ்ண பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதியுலா காட்சியும் வெகு விமர் சியாக நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடந்த உறியடி விழாவில் அப்பகுதியினர் பங்கேற்று உறியடி உற்சவத்தில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அழகர்சாமி, சக்கரவர்த்தி, கலியபெருமாள் பிள்ளை, பேரூராட்சிக்கவுன்சிலர் வாசு உள்ளிட்ட விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !