உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் உறியடி திருவிழா

சேலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் உறியடி திருவிழா

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு, உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், நேற்று, உறியடி திருவிழா நடந்தது. இதில், கண்ணன் ஸ்வாமி அலங்காரத்தில் எழுந்தருளி, செவ்வாய்ப்பேட்டை கோவிலில் இருந்து புறப்பட்டு, லீபஜார், அப்புசெட்டி தெரு, பெரிய எழுத்துக்காரத் தெரு, சின்ன எழுத்துக்காரத் தெரு என முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இறுதியாக, பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் முன், "வெண்ணை தாலி நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை, ஸ்ரீதாரவி கைங்கர்ய டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !