உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு நவீன ஔிபரப்புகருவிகள்!

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு நவீன ஔிபரப்புகருவிகள்!

திருப்பதி: திருமலை திருப்பதியில் நடைபெறும் திருவிழாக்களிலேயே பிரசித்தமானது பிரம்மோற்சவ விழா.இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெறுகிறது.முதல் பிரம்மோற்சவ விழா வருகின்ற 16ந்தேதி துவங்கி 24ந்தேதி வரையிலும் இரண்டாவது பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் 14ந்தேதி துவங்கி 22ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவினை கோவிலுக்கு சொந்தமான எஸ்விபிசி என்று அழைக்கக்கூடிய ஸ்ரீவெங்கடேஷ்வராபக்திசேனல் சார்பில் நேரிடையாக ஔிபரப்பு செய்யப்படுகிறது.தெலுங்கு மொழி தவிர தமிழ்,கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலும் நேர்முகவர்ணனை செய்யப்படுகிறது.

சுவாமி புறப்பாடு துவங்கி நிறைவடைவது வரையிலும் நடைபெறும் இந்த நேரடி ஔிபரப்பு குறித்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. வாகனங்கள் பளிச்சென தெரிவதற்காக மாடவீதிகளில் கூடுதல் விளக்குகள் போடவும்,பக்தர்களையும் வாகனங்களையும் உயரத்தில் இருந்து வித்தியாசமாக காட்டுவதற்காக ‘ஜிம்மிஜிப்’ என்று சொல்லக்கூடிய கிரேனில் கேமிரா வைத்து படமெடுக்கவும் இந்த வருடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்விபிசியின் புதிய சிஇஒவாக ஏவி,நரசிம்மராவ்வை நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !