உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்

திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 22ல் நடக்கும் மண்டலாபிஷேகம் நிறைவு நிகழ்ச்சிக்காக, நேற்று யாகசாலை பூஜை துவங்கியது.கோயிலில் ஜூன் 6ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 7முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது. திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க குடம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு வெள்ளி குடங்கள், 1008 கலசங்கள், 108 சங்குகள், விநாயகர், துர்க்கைக்கு தலா 9 கலசங்களில் புனித நீர் நிரப்பி வைக்கப்பட்டது. ஆறு யாக குண்டங்களில், நேற்று மாலை சிவாச்சார்யார்கள் பூஜைகள் நடத்தினர். இன்று காலை இரண்டாம் காலம், இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை காலை நான்காம் கால கால யாகசாலை பூஜைகள் முடிந்து சுவாமிகளுக்கு புனிதநீர்மூலம் அபிஷேகம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !