விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலங்கார குடை தயாரிப்பு தீவிரம்!
விருத்தாசலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருத்தாசலத்தில் அலங்கார குடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியின்போது, வீடுகளில் களிமண் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, குடை வைத்து, அருகம்புல், எறுக்கம்பூ மாலைகள் அணிவித்து, அவில், பொறி, நாவல் பழம், வெல்லம், கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை செய்வர். வரும் 17ம் தேதி விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு, விருத்தாசலத்தில் வண்ணக் வண்ண குடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இது குறித்து குடை வடிவமைப்பாளர் தீர்த்தமண்டப தெரு ம ருதையன் கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளாக குடைகள் தயாரிக்கிறோம். மூங்கில் குச்சிகளில் தெர்மா கோல், அட்டை ஆகியவை மூலம் குடைகள் தயாரிக்கப்படுகிறது. அதில், பூ குடை, தட்டு குடை, பேப்பர் குடை, மெட்ராஸ் குடை உள்ளிட்ட பல்வேறு குடைகள் செய்யப்படுகின்றன. கலர் நு ால், வண்ண ஜிகினா தாள், பிளாஸ்டிக் பூ, டிசைன் காகிதம் அழகுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு குடை 10 முதல் 25 ரூபாய் வரை விற்கிறோம்’ என்றார்.