மதுரை வேளாங்கண்ணி அன்னை அலங்கார தேர் பவனி!
ADDED :4048 days ago
மதுரை: மதுரை அண்ணா நகரில் வேளாங்கண்ணி அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு, அலங்கார தேர் பவனி நேற்று நடந்தது.முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில் ஆக.,29ல் கொடியேற்றம் நடந்தது. விழாவில் பாதிரியார்கள் மரிய அருள்செல்வம், அப்போலின் கிளாரட்ராஜ், ஜான்ரிச்சர்டு கலந்து கொண்டனர். தினமும் மாலை 6:30 மணிக்கு திருப்பலி நடந்தது. பிஷப் அந்தோணிபாப்புசாமி தலைமையில் நேற்று மாலை 6:30 மணிக்கு திருப்பலி நடந்தது. பின் அன்னை திருவுருவ அலங்கார தேர் பவனி நடந்தது.