சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவங்கியது!
ADDED :3716 days ago
விருத்தாசலம்: ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில், சதுர்த்திப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில், 10 நாள் சதுர்த்தி பெருவிழா நேற்று (8ம் தேதி) துவங்கி, வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் உற்சவர் மணிமுக்தாற்றில் எழுந்தருளினார். பின்னர், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:30 மணியளவில் மூஷிக வாகனத்தில் சித்தி விநாயகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.