செங்கல்பட்டு கோதண்டராமர் கோவில் உறியடி விழா
ADDED :3714 days ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, கோதண்டராமர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம், உறியடி விழா நடைபெற்றது. செங்கல்பட்டு, கோதண்டராமர் கோவிலில், ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக கொண்டாடப்படும், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கடந்த 5ம் தேதி, துவங்கியது.கடந்த 7ம் தேதி, கிருஷ்ணருக்கு வெண்ணெய் திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுமுன்தினம், மாலை 6:00 மணிக்கு, கிருஷ்ணர், கோவிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா சென்றார். இரவு 9:00 மணிக்கு, உறியடி உற்சவம் நடைபெற்றது.