அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3716 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வானுவர் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 7ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 8ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று (9ம் தேதி) நான்காம் கால யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடாகி காலை 11:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.