உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் உண்டியல் திறப்பு: ரூ.2.31 லட்சம் வருவாய்

பத்ரகாளியம்மன் உண்டியல் திறப்பு: ரூ.2.31 லட்சம் வருவாய்

ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில், மூன்று உண்டியல்கள் உள்ளன. ஆண்டுக்கு, மூன்று முறை உண்டியல் திறக்கப்படும். நேற்று காலை, இணை ஆணையர் முருகைய்யன், பரம்பரை அறங்காவலர் தங்காயம்மாள் ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் ரொக்கம், 2 லட்சத்து, 30,850 ரூபாய், தங்கம், 24.200 மி.கி., மற்றும் வெள்ளி, 67.900 மி.கிராம் இருந்தது. உண்டியலில் ஒரு அமெரிக்கன் டாலர் நோட்டும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !