கோட்டை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா பணிகள் தீவிரம்
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் திருத்தேர்விழா, வரும், 17ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 24ம் தேதி நடக்கிறது. இவ்விழாவுக்காக, மண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர், கோவில் முன் கொண்டு வந்து, தேர் சக்கரங்களுக்கு வண்ணம் தீட்டி, தேர் பளபளப்பாக்கும் வகையில், புனரமைப்பணிகள் நடக்கிறது. தவிர, கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. தேர்த்திருவிழா நிகழ்வுகள் வரும், 17ம் இரவு, 8 மணிக்கு கிராம சாந்தியும் துவங்கி, 18ம் தேதி காலை, 8 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை, கொடியேற்றமும், இரவு, 7 மணிக்கு அன்னப்பட்சி வாகனம் உலாவும் நடக்கிறது. 19ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு, 7 மணி சிம்ம வாகன உலாவும், 20ம் தேதி இரவு, 7 மணி அனுமந்த வாகன உலாவும், 21ம் தேதி இரவு, 7 மணிக்கு கருடசேவையும், 22ம் தேதி இரவு, 7 மணி யானை வாகன காட்சியும், 23ம் தேதி மாலை, 5.30 மணிக்கு திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், 24ம் தேதி காலை, 7.45 மணிக்கு சுவாமி திருத்தேர் எழுந்தருளல், 9 மணி திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. தொடர்ந்து, செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. வரும், 25ம் தேதி காலை, 8 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு, 7மணிக்கு குதிரை வாகனமும், 26ம் தேதி இரவு, 7 மணிக்கு சேஷ வாகனம், 27ம் தேதி காலை, 6 மணிக்கு மகா அபிஷேகம், மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுதல் நடக்கிறது.