உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் ஆவணி மாத பூச விழா!

வள்ளலார் மன்றத்தில் ஆவணி மாத பூச விழா!

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆவணி மாத பூச விழா நடந்தது. மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் செட்டியார் தலைமை தா ங்கினார். மன்ற நிர்வாகிகள் முத்துகருப்பன், பாலசுப்ரமணியன், நாராயணன் முன்னிலை வகித்தனர். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான  அடிகள் முன்னிலை வகித்தனர். அகவல் படித்து மழை வேண்டியும், உலக அமைதிக்காக  சிறப்பு பிரார்த்னை நடந்தது. தரணிதரன் வரவேற்றார்.  வடசெட்டியந்தல் சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம், சீனுவாசன், சுரேஷ், மாரிமுத்து ஆகியோர் பேசினர். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கஜலட்சுமி தரணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !