வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடி உற்சவம்!
ADDED :3709 days ago
வாலாஜாபாத்: நாயக்கன்பேட்டை ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு, உறியடி உற்சவம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் உறியடி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு உறியடி உற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 7:00 மணி அளவில், ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.மாலை, 6:00 மணி அளவில், ருக்மணி, சத்ய பாமா சமேத வேணுகோபால சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தனர். அதை தொடர்ந்து இரவு, 7:30 மணி அளவில், வழுக்கு மரம் ஏறுதல்; உறியடித்தல் ஆகிய நிழச்சிகளும்; இரவு சிறப்பு வாணவேடிக்கையும் நடந்தன.