காரைக்காலில் மூஷிக வாகனத்தில் சித்தி விநாயகர் வீதியுலா!
காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி மகோத்சவ விழா முன்னிட்டு ஓம் ஐயப்பன் குழு சார்பில் மூஷிக வாகனத்தில் சித்தி விநாயகர் வீதியுலா நடைபெற்றுது. காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நிதியின் கிளையான அரசலாற்றின் வடபகுதியில் அமைந்துள்ள அம்மையார் மாங்கனித்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் இக்கோவிலில் சதுர்த்தி மகோத்வ விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்து சாந்த, தவஜா பூஜைகளுடன் கொடியோற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மகோத்சவத்தில் சூரிய பிரவை, நாகாபரணம்,கயிலாயம் உள்ளிட்ட பல வாகனங்களில் விநாயர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.மூன்றாம் நாள் நிகழ்ச்சியான நேற்று முன்தினம் சித்திவிநாயகர் ஓம் ஐயப்பன் குழு சார்பில் மூஷிக வாகனத்தில் சித்தி விநாயகர் வீதியுலா நடைபெற்றுது. இந்நிகழ்ச்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி, சித்திவிநாயகர் ஓம் ஐயப்பன் குழு ராஜகணபதி குருசாமி, சிவபாலன், சம்மந்தன், ரஞ்சன், சண்முகமூர்த்தி,பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.