பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்!
ADDED :3707 days ago
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா, செப்.8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று 6ம் திருநாளாக கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 6 மணிக்கு மேள தாளங்களுடன் விநாயகர் திருவீதி வலம் வந்து, கோயில் குளம் அருகே எழுந்தருளினார். அங்கு யானை முகத்தில் காணப்பட்ட சூரனுடன் போரிட்டார். பின்னர் சூரனின் யானை தலையைக் கொய்து சம்ஹாரம் செய்தார். பின்னர் இரவில் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். செப். 16ல் தேரோட்டம், சந்தனக் காப்பு அலங்காரம், செப்.17ல் காலையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.