உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபுத்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம்

வடபுத்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: வடபுத்தூர் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா வடபுத்தூர் ராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் ஜீர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஆராதனம், ஆச்சாரிய ரித்விக்வர்ணம், சங்கல்பம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கலாகர்ஷணமும், இரவு 9 மணிக்கு கும்ப ஆராதனை, அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், மகா திருமஞ்சனம், பூர்ணாஹூதியும் நடந்தது. பின்னர் 9ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு புண்யாகவாசனம், ஹோமம், 6:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கும்பம் புறப்பாடும், 7:00 மணிக்கு சம்ப்ரோஷணம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாற்று முறை தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கினர். இரவு 7 :00 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !