மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
5164 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
5164 days ago
திருவெண்ணெய் நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் ஓசூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 12ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் துவங் கியது. மறுநாள் காலை இரண்டாம்கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம்கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.தொடர்ந்து 14ம் தேதி காலை 8.35 மணிக்கு ஓசூர் மாரியம்மன் மற்றும் துர்க்கையம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. சர்வசாதகத்தை ஞானசம்மந்தசிவாச்சாரியார், சுந்தரமூர்த்திசிவம் செய்தனர்.விழாவில் மணக்குளவிநாயகர் கல்வி குழும தலை வர் கேசவன், துணை தலைவர் சுகுமாரன், நிர்வாக இயக்குனர் தனசேகரன், மருத்துவக் கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் அமரநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5164 days ago
5164 days ago