தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா
ADDED :4016 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில், அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு ஊஞ்சல் தாலாட்டு, தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தேவபாண்டலம் பருவதராஜ குலத்தினர் செய்திருந்தன.