உலக நன்மை வேண்டி வேள்வி
ADDED :3694 days ago
பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற ஆண்டு விழாவில் உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி நடந்தது. காலை 3.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 4.00 மணிக்கு கூட்டு வழிபாடு நடந்தது. புதுச்சேரி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆஷா முன்னிலை வகித்தார். சேலியமேடு வழிபாட்டு மன்ற தலைவர் லோகநாதன் கொடியேற்றினார்.காலை 10.30 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜைகள், உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி நடந்தது. அமைச்சர் ராஜவேலு தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம், ஆடை தானம், மஞ்சள், குங்குமம், தாலி சரடு வழங்கினார். மன்ற பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.