உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் அம்மன் நகை மீட்பு!

காளையார்கோவில் அம்மன் நகை மீட்பு!

காளையார்கோவில்: சிவகங்கை அருகே காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில்,  வீதி உலாவின் போது  காணாமல் போன அம்மனின் 30 பவுன் நகை கண்டெடுக்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செப்., 9ல் நடந்த கோயில்  கும்பாபிஷேகத்தை தொடர்ந்து செப்., 10ல் திருக்கல்யாணம் நடந்தது. தங்க அங்கியில் அம்மன், சுவாமி வீதி உலா வந்த போது சொர்ண வள்ளி  அம்மனின் இடதுகையில் உள்ள அபயஅர்த்தமம் பகுதி (30 பவுன்) காணாமல் போனது. இது குறித்து கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் போலீசில் புகார் செய்தார். நேற்று இரவு தென்றல்நகர் பகுதியை சேர்ந்த முனியாண்டி மனைவி சுந்தரவள்ளி, 52, காணாமல் போன அம்மன் நகை (30  பவுன்) ரோட்டில் கிடந்ததாக காளீஸ்வர குருக்களிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !