உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜாத்திரை திருவிழா: நேர்த்தி கடனுக்காக 5,000 ஆடுகள் குவிப்பு!

ஜாத்திரை திருவிழா: நேர்த்தி கடனுக்காக 5,000 ஆடுகள் குவிப்பு!

பொதட்டூர்பேட்டை : ஜாத்திரை திருவிழாவில், அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்களை குறிவைத்து, பொதட்டூர்பேட்டை சந்தையில், விற்பனைக்காக, 5,000 ஆடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

விற்பனைக்காக...: பொதட்டூர்பேட்டையில், ஜாத்திரை திருவிழாவில், நாளை, கங்கையம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது; வரும் வெள்ளிக்கிழமை வரை உற்சவங்கள் நடைபெற உள்ளன. இங்கு, 8,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்த பகுதியில், ஜாத்திரை திருவிழாவில் ஏராளமான ஆடுகள், நேர்த்தி கடனாக பலியிடுவது வழக்கம். இதையடுத்து, ஜாத்திரை திருவிழாவிற்கு முன், பொதட்டூர்பேட்டை ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், வெள்ளாட்டு சந்தை நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 5,000க்கும் மேற்பட்ட ஆடுகளை, சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர்.

கிடாவுக்கு கிராக்கி: சந்தையில், 10 கிலோ எடையுள்ள ஆடு, 3,500 ரூபாய் முதல், விலை பேசப்படுகின்றன. தரமான ஆட்டுக்கிடாக்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. வியாபாரிகளிடம் பேரம் பேசி, ஆடுகளை வாங்கிச் செல்வதில், பகுதி வாசிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !