திண்டிவனத்தில் வைணவ மாநாடு!
திண்டிவனம்: திண்டிவனத்தில், நம்மாழ்வார் சபை சார்பில், 20வது ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. மயிலம் ரோட்டிலுள்ள சுலோச்சனா பங்காரு திருமண மண்டபத்தில், நம்மாழ்வார் சபை சார்பில், 20ம் ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. துவக்க நிகழ்ச்சியாக, தென்களவாய் கிராமத்தை சேர்ந்த கண்ணன் பட்டாச்சாரியர் கருட கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, திருமலா திருப்பதி ஆழ்வார் திவ்யபிரபந்த திட்ட செயலாளர் டாக்டர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சொரத்தூர் வேதாந்த ராமானுஜ தாசர், நொளம்பூர் ராமதாஸ் ராமனுஜதாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், கும்பகோணம் ஒப்பிலியப்பன் சன்னதி, கோபால தேசிகாச்சார்யா மகாதேசிகள் ஜீயர் சுவாமிகள், சிறப்புரையாற்றி, ஆசி வழங்கினார். மதுராந்தகம், ரகுவீரன் சுவாமிகள், உடையவனும் உடையவரும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். திண்டிவனம் நம்மாழ்வார் சபையின் தலைவர் வேங்கடேச ராமானுஜ தாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.