உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள்

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள்

ஊத்துக்கோட்டை : விநாயகர் சதுர்த்தி விழாவில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தைச் சேர்ந்த பென்னலுார்பேட்டை, வெங்கல், பெரியபாளையம், ஆரணி ஆகிய பகுதிகளின் விநாயகர் சிலை அமைப்பாளர்களிடம், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, டி.எஸ்.பி., மாணிக்கம் கூறியதாவது:

ஒவ்வொரு பகுதியிலும், 3 அடி முதல் 6 அடி உயரமுள்ள களிமண் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்
தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்க, அவர்களின் அனுமதி பெறவேண்டும்
சிலை அமைப்பவர்கள் வெளிச்சம், பாதுகாப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும்
கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை தவிர்க்க வேண்டும்
மதப் பிரச்னை ஏற்படாத வகையில், விழாவினை கொண்டாட வேண்டும்
சிலைகளை அந்தந்த இடங்களில் உள்ள குளம், ஏரிகளில் கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !