ஆலத்தி அய்யனார் கோயில்கும்பாபிஷேக யாகசாலை பூஜை
திருப்புத்தூர்: பட்டமங்கலம் கீழத்தெரு ஆலத்தி அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கின.இக்கோயிலில் கடந்த 1976,1996ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது 19 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை அனுக்ஞை,விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதலாம் யாகசாலைபூஜைகள் நடந்தன. இன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை காலை 7 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜைகள் நடைபெற்று,காலை 8.45 மணிக்கு மகா பூர்ணாகுதியும், காலை 9.30 மணிக்கு கோபுரம் மற்றும் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறும். காலை 10.30 மணிக்கு திருப்பட்டு சாத்துதல் நடைபெறும். ஏற்பாட்டினை பட்டமங்கலம் கீழத் தெருவார்கள், நாட்டார்கள், நகரத்தார்கள், காரைக்குடி முத்துவீரப்ப செட்டி கருப்பாத்தான் வகைப் பங்காளிகள் மற்றும் நகரத்தார் செய்கின்றனர்.