உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவ நாராயணருக்கு சன்னதி உற்சவம்

ராகவ நாராயணருக்கு சன்னதி உற்சவம்

விழுப்புரம்; திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவ நாராயண பெருமாள் கோவிலில் சன்னதி உற்சவம் நடக்கிறது. சன்னதி உற்சவத்தை யொட்டி ஸ்ரீ ராகவ நாராயண பெருமாள் கோவிலில் வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு வாஸ்து சாந்தி, புண்யாகவாஜனம், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், திருக்கல்யாணம் நடக்கிறது. இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவிலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு பாண்டுரங்க பக்த பாகவதர்களின் திவ்யநாம பஜனை, 5:30க்கு திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை நடக்கிறது. பின்னர், 19ம் தேதி காலை 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 20ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுமார் திருமஞ்சனம், ஆராதனை விடையாற்றி நடக்கிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் குருமணி மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !