பழநி மலைக்கோயிலில் கேரள கவர்னர்
ADDED :3676 days ago
பழநி:பழநி மலைக்கோயிலில் கேரள கவர்னர் சதாசிவம், குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.பழநிக்கு காலை 11.30 மணிக்கு வந்த கவர்னரை, ஆர்.டி.ஓ., கீதா, தாசில்தார் மாரியப்பன் தலைமையிலான வருவாய் துறையினர் வரவேற்றனர். திண்டுக்கல் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். ரோப்கார் மூலம் பழநி மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் வரவேற்றனர். பகல் 12 மணி உச்சிகால பூஜையில் மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமியை கவர்னர் தரிசனம் செய்தார். அதன்பின் காரில் ஈரோட்டிற்கு புறப்பட்டுசென்றார்.