விநாயகர் சதுர்த்தி பூக்கள் விலை உயர்வு
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.திண்டுக்கல் பகுதி யில் ஏ.வெள்ளோடு, கொடைரோடு, சிறுநாயக்கன்பட்டி, செம்பட்டி, ஆத்துார், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்குவிளையும் பூக்கள் திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் 25 டன் வரை விற்பனையாகின்றன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவை அதிகரித்ததால் நேற்று பூக்களின் விலை அதிகஅளவில் உயர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன் கிலோ ரூ.250 க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600 ஆக உயர்ந்தது. கிலோ ரூ.100 க்கு விற்ற சம்பங்கி ரூ.400 ஆகவும், ரூ.80 க்கு விற்ற மல்லிகை ரூ.250 ஆகவும், ரூ.180 க்கு விற்ற காக்கரட்டான் ரூ.260 ஆகவும், ரூ.120க்கு விற்ற முல்லை ரூ.220 ஆகவும், ரூ.90 க்கு விற்ற பிச்சி ரூ.160 ஆகவும் உயர்ந்தன.