கரிவரதராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :3670 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கான புதிய தேர், நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில் வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலின் பழைய தேர் பழுதடைந்த நிலையில், பக்தர்கள் சார்பாக புதிய திருத்தேர் அமைத்து தரப்பட்டது.புதிய தேரின் வெள்ளோட்டம், கோவிலை சுற்றிலுள்ள தெருக்களில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, துணை சபாநாயகர் ஜெயராமன், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.