உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

அண்ணா நகர்: மேற்கு அண்ணா நகரில் உள்ள, கலைச்செல்வ விநாயகர் கோவில், மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. மேற்கு அண்ணா நகரில், மாநகர போக்குவரத்து கழக பணிமனைக்கு உட்பட்டு, கலைச்செல்வ விநாயகர் கோவில் உள்ளது. அங்கு, இன்று காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு, நான்காம் கால பூஜையில், விநாயகர் வழிபாடு, எஜமான் சங்கல்பம், காலை 8:30 மணிக்கு நாடி சந்தானம் தத்துவார் அர்ச்சனை உள்ளிட்ட வைபவங்கள் நிகழ உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !